பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் டீ சேர்ட் அறிமுக விழா
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்னோம்பல் அமைப்பினால் புதிய டீ சேர்ட் அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று(27)பிரதேச செயலக நலன்னோம்பல் அமைப்பின் உப தலைவரும்,கணக்காளருமான வை. ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய டி சேர்ட்டினை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,நலன்னோம்பல் அமைப்பின் செயலாளர் எம்.ஹஸன்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments