Breaking News

நிந்தவூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார் சுகாதார வைத்திய அதிகாரி !

நூருல் ஹுதா உமர்

நிந்தவூரின் சுகாதார நடவடிக்கைகளில் விழிப்பாக செயற்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், சுகாதார விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சுகாதார துறை சார்ந்த விடயங்களில் சிறந்த சேவையினை மேற்கொண்ட நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா பஸீரின் பிரியாவிடை நிகழ்வு (06) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

சுகாதார வழிகாட்டலுக்கமைய இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன், தொற்று நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.அன்சார் (நளீமி), நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், சுகாதார பிரிவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களால் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீரை பாராட்டி கெளரவித்து நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.









No comments

note