"ஸம்ஸ் நண்பர்கள் வட்டம்2004" 2021 நாட்காட்டி வெளியீடு.
(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)
2021ம் ஆண்டுக்கான நாட்காட்டியினை "ஸம்ஸ் நண்பர் வட்டம் 2004" வெளியீடு செய்து பொது நிறுவனங்களுக்கு விநியோகித்து வருகிறது. மருதமுனையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும், பொது நூலகங்களுக்கும் நாட்காட்டி விநியோகிக்கப்பட்டது.
அதன் ஓர் அங்கமாக கல்முனை பிரதேச செயலகத்தில் சமூக சேவைகளுக்கான பொறுப்பதிகாரியினை சந்தித்து அமைப்பினுடைய செயலாளர் ஏ.ஆர்.எம் கியாஸ் உதவிச் செயலாளர் எம்.எம்.எம்.முஸ்தாக் மற்றும் அமைப்பின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினருமாகிய பீ.எம். ஷிபான் உள்ளிட்டோர் நாட்காட்டியை வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம் .
No comments