கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் மர்ஹும் எஸ்.கே. காதர் மொஹிதீன் நினைவாக நீர்தாங்கி அமைக்க ஏற்பாடு.
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் மர்ஹும் எஸ்.கே. காதர் மொஹிதீன் நினைவாக நீர்தாங்கி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்லூரியில் குடிநீரை சேமித்து மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான 5000 லீட்டர் கொண்ட நீர் தொட்டியை வைப்பதற்கான நீர்தாங்கியை (WATER TANG STAND) மர்ஹும் எஸ்.கே. காதர் மொஹிதீன் நினைவாக அவரது புதல்வரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான சீ.எம். சேகுதாவூத் அவர்கள் நிர்மாணித்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
K.M.C.C. MEDIA UNIT




No comments