சம்மாந்துறை பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை ,சம்மாந்துறை பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியராக கடமைபுரியும் சம்மாந்துறையை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு முடிவு கிடைக்க பெறாமல் அவரின் சொந்த ஊரான சம்மாந்துறைக்கு 26ஆம் திகதி வருகை ததந்தனையடுத்து சுய தனிமைப்படுதலில் உள்ளாக்கப்பட்டிருந்தார்.
அவரின் பி.சி.ஆர் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பட்டதற்கமைய கொரோனா தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதற்கமைய அவருடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் துறைமுக அதிகார சபை ஊழியர்கள் மற்றும் நபரின் உறவினர்களுக்கும் கடந்த வியாழக்கிழமை 36 நபர்களுக்கு பி.சி.ஆர்மேற்கொள்ளப்பட்டது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி நேற்று ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேசத்தில் மொத்தமாக ஆறு பேர் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments