Breaking News

புத்தளம் இளைஞர்களால் "கபன் சீலை போராட்டம்" புத்தளம் நகரில் முன்னெடுப்பு !

கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக புத்தளம் இளைஞர்கள்  ஒன்றினைந்து புத்தளம் நகரமெங்கும் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கபன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் ஒன்றை இன்று மாலை முன்னெடுத்தனர்.













No comments

note