கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - கல்முனை பொதுப்பணி மன்றத் தலைவர் எஸ்.எல்.எம்.அமீர் தெரிவிப்பு..
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரிஸ்னியின் அயராத முயற்சிக்கும்,அரும்பணிக்கும் கல்முனை வாழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்முனை பொதுப் பணி மன்றத்தின் தலைவரும்,தொழிலதிபருமான அல்ஹாஜ் எஸ்.எல் அமீர் தெரிவித்தார்.
இன்று வெளியிட்ட விசேட அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவருடைய அறிக்கையில்...
கல்முனை பகுதியில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை முழுமையான கட்டுப்பாடுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு வீதியாகவும்,வீடுவீடாகவும் தனது உத்தியோகத்தர்களுடன் PCR மாதிரிகள் மற்றும் அண்டிஜன் பரிசோதனை செய்வதற்காகவும் வருகை தருகின்றார்கள்.ஆனால் அதற்கு எமது கல்முனை வாழ் மக்களில் சிலர் ஒத்துழைப்புக்களும்,ஒத்தாசைகளும் வழங்காமல் உதாசீனம் செய்து கொண்டு ஓடி ஒழிகின்றார்கள். இவ்வாறு ஓடி ஒழிவதனால் இந் நோய் பரவலாக்கப்பட்டு எமது சமூகம் அழிந்து செல்லும் நிலை ஏற்படக்கூடும்.அதனால்தான் சுகாதார வைத்திய அதிகாரி மிக கஸ்டங்களுக்கு மத்தியில் பாடுபடுகின்றார்.ஆனால் சிலபேர் தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனைப் போல முகநூல்களில் அவருக்கு வேண்டும் என்றே விமர்சனம் செய்து கொண்டு வருகின்றார்கள்.அவ்வாறானவர்கள் புரிந்து கொள்ளுங்கள் எமது நலனுக்காகவும், சமூகத்தின் நலனுக்காகவும் மட்டுமே டாக்டர் ரிஸ்னி பாடுபடுகின்றார்.என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எனவே அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை வாழ் மக்களை வினயமாக வேண்டிக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
எமது சமூகத்தையும் நமது பிரதேசத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுனனின் அறிவுறுத்தல்களோடு சிறப்பாக பணி செய்து வரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரிஸ்னியினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வரவேற்பதுடன், பாராட்டுவதோடு அவருக்கு முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்குமாறு கல்முனை வாழ் மக்களை பணிவாக கேட்டு கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.
அதேவேளை, கொறோனா தொற்றிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததன் விளைவாக எமது பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நமது சுகாதரா துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதை நாங்கள் நேரடியாக கண்டு கொண்டோம்.
மேலும், கொறோனா அபாய வலயங்களில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு வந்தவர்கள் மூலம் கொறோனா தொற்று ஏற்பட்ட கடந்தகால அனுபவங்களை வைத்து அவ்வாறான வலயங்களில் இருந்து வருகை தந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி இரவு பகல் பாராது பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் தொற்றாளர்களை அடையாளம் கண்டமையையிட்டு டாக்டர் ரிஸ்னி தலைமையிலான குழுவினரை வெகுவாகப் பாராட்டுவதோடு இதற்காக உழைத்த அனைத்து உத்தியோகத்தர்களும் இத்தருனத்தில் நன்றியுடன் நினைவுகூறப்பட வேண்டியவர்கள்.
மக்களின் நலன் கருதி சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்தும் திறம்பட செய்ய பொதுமக்கள் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்பதுடன் அவர்களது வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கல்முனை பொதுப் பணி மன்றம் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றது என தெரிவித்தார்.
No comments