Breaking News

இதுதான் ஜனநாயகம்

குற்றத்தின் தன்மையிலும், சட்டத்திலும், நீதிமன்றங்களிலும் எந்தவித மாற்றமுமில்லை.

ஆனால் ஆட்சி அதிகாரம் மட்டுமே மாறியது. அதன்பின்பு குற்றவாளிகளுக்கான தண்டனைகளின் தன்மைகளும் மாறியது.

கடந்த ஆட்சியில் குற்றவாளியாக தென்பட்டவர்கள் இந்த ஆட்சியில் நிரபராதிகளாகவும், கடந்த ஆட்சியில் நாட்டுப் பற்றாளர்களாக காணப்பட்டவர்கள் இந்த ஆட்சியில் தேசத் துரோகிகளாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

அதாவது கடந்த ஆட்சியில் கொலை குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள், இந்த ஆட்சியில் நிரபராதிகளென விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கெதிரான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் சிறு குற்றம் செய்தவர்கள் அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அல்லது முறைகேடாக மக்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றத்திற்காக இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிரான சக்திகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இங்கே சட்டத்துக்கு குற்றவாளியாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆட்சியாளர்களுக்கு எதிராக விரல் நீட்டக்கூடாது என்பது மட்டும் எழுதப்படாத சட்டமாகும்.

என்னதான் குற்றம் செய்தாலும் ஆட்சியாளர்களுக்கு அடிமையாக இருந்தால், அவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படமாட்டாது என்பது புரிகிறது.
அதாவது ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

இதனால் எமது நாட்டைப்பற்றியும், ஆட்சிமுறை, நீதித்துறை போன்றவற்றின் நம்பகத்தன்மை பற்றி வெளிநாட்டில் உள்ளவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனை துளியளவிலும் இருப்பதாக தெரியவில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது



No comments

note