Breaking News

அமைதியான முறையில் "கவன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் ஒன்று நாடு முழுவதிலும் ஆரம்பம் !

நூருல் ஹுதா உமர் 

கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் முஸ்லிம் உடல்களை (ஜனாஸாக்களை) நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது. 

பாராளுமன்றத்திலும் ஆளும் தரப்பு, எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிங்களின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதுடன். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் இலங்கை தூதரகங்களின் முன்னாள் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக மௌனமாக "கவன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் ஒன்று நாடு முழுவதிலும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொது இடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்களில் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் இந்த "கவன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உட்பட பொதுமக்கள் பலரும் இனவாதம், பிரதேசவாதம் கடந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.










No comments

note