அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 9107 குடும்பங்களுக்கான முதலாம் கட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் கடந்த இருவாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசத்தில் அமைந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 9107 குடும்பங்களுக்கான முதலாம் கட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் மக்களிடம் விரைவாக சென்றடையும் வகையிலும், இப்பொருட்கள் தரமானவையாக என்பதனை கண்டறியும் நோக்கிலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வை இட்டுவருவதுடன் இது தொடர்பிலான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அட்டாளைச்சேனை 02 ஆம் பிரிவில் கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகளை இக்குழவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் நிவாரணப் பொதிகளையும் பொது மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இதேவேளை, இப்பயனாளிகளுக்கு 02ஆம் கட்ட நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
No comments