Breaking News

2021ம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல்

(சர்ஜுன் லாபீர்)

புதிய ஆண்டின்(2021) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(2021.01.01)காலை 8.58மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் முன்னேறும் நாட்டை கட்டியெழுப்ப "சுபீட்சத்தின் நோக்கு" எனும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க பயனுள்ள பிரஜை,மகிழ்ச்சியான குடும்பம் , பண்பாடான , ஒழுக்கமுள்ள நீதியான சமுதாயம் மற்றும் சுபீட்சமான தேசம் என்ற நான்கு வித குறிக்கோள்களை வெற்றி கொள்வதற்காகப் பத்துப் பிரகடனங்களைக் கொண்ட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . 

மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல் ரிஸ்னியினால் கொரோனா சம்மந்தப்பட்ட விசேட உரை நிகழ்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் மாற்று திறனாளிகளுக்கான உட் செல்லும் வழியும் திறந்து வைக்கப்பட்டது என்பதும் விசேட அம்சமகும்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்
ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,நிர்வாக கிராம சேவை.உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல் ஜனூபா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) யூ.எல் ரமீஸ்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(திட்டமிடல் பிரிவு) எம்.ஹசன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கொண்டனர்.














No comments

note