ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் யார்?
பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே இடம்பெற்று வந்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் மௌனம் காத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் சிறிகொத்தவில் கூட உள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE
No comments