கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
"உதிரம் கொடுப்போம், மனிதம் காப்போம் - எனும் தொனிப் பொருளில் புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் (7) இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 38 பேர் கலந்து கொண்டு தமது இரத்தத்தை தானமாக வழங்கிச் சென்றனர்.
நாட்டின் இரத்த வங்கியின் இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கனமூலை "இளைஞர் வலுவூட்டல் அமைப்பு" மற்றும் ரம்ய லங்கா கனமூலை கிளை ஏற்பாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்பஸ் லத்தீப் -
No comments