Breaking News

கொரோனாவிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை.

ஐ.எல்.எம் நாஸிம்

புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலுக்கமைய கொரோனா   தொற்றிலிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு  வேண்டி நாடுமுழுவதும்  மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை  தலைவர் யூ.எல் மஹ்ரூப் மெளலவி தலைமையில்  இன்று (8) மாலை  கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டி  விசேட துஆப்பிரார்த்தனை நடைபெற்றது.


விசேட  துஆ பிரார்த்தனையை  சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை கல்வி  சுகாதார குழு தலைவர் அல்ஹாஜ்  கே.எம்.கே றம்சின் காரியப்பர் நிகழ்த்தியதுடன் இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நெளஷாட் உட்பட உலமாக்கள் பள்ளிவாசல் நிருவாகத்தினர் சுகாதார  நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.








No comments

note