மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்
MADURAN KULI MEDIA
1911/2020
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை வழங்கும் பணியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக அறிக்கையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீள வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் போது ஏற்படக்கூடிய நெரிசலை தடுப்பதற்காக வருமான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்ட 2020 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலும் தண்டப்பணமின்றி வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments