Breaking News

கொவிட் பாதிப்பினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது - சமல், அனுமதி வழங்கவில்லை - விமல்

கொரோனா பாதிப்பினால் மரணிப்பவர்களை தெரிவு செய்யப்பட்ட விஷேட பிரதேசத்தில் அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (12) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்.

இதேவேளை கொரோனா பாதிப்பினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது தவிர தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அடக்கம் செய்வது தொடர்பில் தீர்மானிக்கும் இடமல்ல எனவும் அதற்கு சுகாதார நிபுணர்கள் உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.



No comments