இதுவரை அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வியப்பு தகவல்.
MADURAN KULI MEDIA
06/11/2020
நாட்டில் இதுவரை அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்து மக்களை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய (05) தினத்தில் 383 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர்.
பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களே நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 9,092 ஆக உயர்வடைந்துள்ளது.
COVID-19 தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 5,918 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் மேலும் 765 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் பிரகாரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6, 623 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகின.
கொழும்பு 2, வெல்லம்பிட்டிய, கொழும்பு 12, கொழும்பு 14, கொழும்பு 15 பகுதிகளை சேர்ந்தவர்களே COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை 29 COVID-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, கேகாலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து இரண்டு பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்ட கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக COVID-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மாகாணம், எஹலியகொடை, குருநாகல் பொலிஸ் பிரிவு மற்றும் குருநாகல் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments