ஆரச்சிகட்டு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு
ஆரச்சிகட்டு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் நிலையத்தினை தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் மற்றும் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி விளக்கமளித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தொடர்ந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்ற அதேவேளை தொடர்ந்தும் சமூக மட்டத்திலான பரவல் இல்லையென அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments