Breaking News

மூன்றாவது வருடத்தில் ஏகமனதாக நிறைவு பெற்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம்.

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.றாஸிக் தலைமையில் இன்று (05) காலை நடைபெற்ற வாக்கெடுப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறியது.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 08 உறுப்பினர்களும் அமர்வில் கலந்து கொண்டு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏகமனதாக வாக்களித்திருந்தனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது  பிரதேச சபைகளுக்கு முன்னுதாரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை கொண்டு செல்ல சகல உறுப்பினர்களினதும் உத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தவிசாளர் எம்.எ.றாஸிக் மகிழ்ச்சி வெளியிட்டார்.







No comments

note