Breaking News

பொலிஸார் அதிரடி: கல்முனையில் சுகாதார நடைமுறைகளை பேணாதோர் பொலிஸிடம் சிக்கினர்.

நூருள் ஹுதா உமர். 

கோவிட் 19 பரவல் நாட்டில் கடுமையாக பரவிவரும் இச் சூழ்நிலையில் சுகாதார வழிமுறைகளை பேணி நடக்குமாறு  சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

அதன் ஒரு அங்கமாக கல்முனை பிரதேசத்தில் சுகாதார துறை ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் பேணி நடவாது தமது சொந்த விருப்பின் பிரகாரம் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பேணாமல் நடமாடி திரிந்த பலரும் இன்று பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கினர். 

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் இன்று காலை கல்முனையில் உள்ள முக்கிய இடங்களில் திடீரென சோதனை நடவடிக்கையில் இறங்கி கடற்கரையில் சமூக இடைவெளியை பேணாது கதைத்து கொண்டிருந்தோர், வீதிகளில் சுகாதார நடைமுறைகளை பேணாமல் நடமாடியோர் மீது நடவடிக்கை எடுத்தனர். 

இதன் அதிரடி நடவடிக்கையின் பின்னர் பிராந்தியத்தில் உள்ள பயணிகள், பாதசாரிகள், வியாபாரிகள் சுகாதார நடைமுறைகளை பேணி நடந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.






No comments

note