Breaking News

கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது

கண்டி நகர எல்லையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 26 முதல் டிசம்பர் 04 வரை மூடப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் அறிவித்தார்.

கண்டியில் தற்போதைய கொரோனா நிலைமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டியில் 45 பாடசாலைகள் நாளை முதல் மூடப்படும்.

மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, மஹியாவ, நுவரெலியா-மஸ்கெலியா பகுதிகளில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக கோவிட் பணிக்குழு  அறிவித்தது.






No comments

note