Breaking News

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பிரசாந்தன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

நூருள் ஹுதா உமர். 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தனை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பிரசாந்தன்  கொழும்பில் இருந்து வந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) காலை அவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான சாட்சிகளை அவர் அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது.



No comments

note