அரச பாடசாலைகள் 23 ஆம் திகதி திறப்பு !
அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளன.
அனைத்து பாடசாலைகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன.முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.
எவ்வாறாயினும் கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன .தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments