புத்தளம் நகர சபையின் வரவு செலவு திட்டம் மேலதிக 05 வாக்குகளினால் இன்று நிறைவேறியது.
2021 ஆண்டுக்கான புத்தளம் நகர சபையின் வரவு செலவு திட்டம் மேலதிக 05 வாக்குகளினால் இன்று நிறைவேறியது.
புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ் 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் கிடைக்கப் பெற்றதோடு ஒரு உறுப்பினர் நடு நிலை வகித்தார். இரண்டு உறுப்பினர் சபைக்கு சமூகம் தரவில்லை.
ஆதரவாக வாக்களித்தவர்கள் :-
1. கே.ஏ. பாயிஸ்
2.உப நகர பிதா R.A.S புஷ்பகுமார
3.ஏ.எம் அஸ்கின்
4.ஏ.எச்.எம் ரஸ்மி
5.பி.எம் ரனீஸ்
6.பி.எம் பர்வீன் ராஜா
7.ஏ.எம் சிஹான்
8. ஜி.கே.எம் துமிந்த
9.கே.ஏ பேனர்ட் ராஜபக்ஷ
10.எச்.என்.எம்.எம் சிபாக்
எதிராக வாக்களித்தவர்கள் :-
1.எம்.எஸ்.எம் ரபீக்
2.ஜி. விஜேதாச
3.ஜே.எம் டில்சான்
4.எம்.ஐ ஜமீனா
5.கே. அனுலா குமாரி
நடு நிலை :-
1.எஸ்.நகுலேஸ்வரன்
இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments