Breaking News

கத்தார் நாட்டில் மனிதபிமானத்துடன் நடந்து கொண்ட Delivery Boyக்கு பதவி உயர்வு! உள்துறை அமைச்சும் புகழாரம்!

கத்தார் நாட்டில் சக்கர நாற்காலியில் தடுமாறிய  மாற்றுதிறனாளி ஒருவருக்கு பாதையை கடக்க உதவி செய்த Delivery Boy பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கத்தாரின் பாதையொன்றில் Delivery Boy ஒருவர் சக்கர நாட்காலியிலுள்ள ஒருவருக்கு பாதையை கடக்க உதவி செய்யும் காட்சி கத்தார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

அவரது பெயர் பெயர் முஹம்மது யாசின். பங்களாதேஷ் நாட்டை சேர்த்தவர். தலபத் (Talabat) என்ற உணவு விநியோக நிறுவனத்தில் பணி புரிகின்றார்.

மேற்படி நிகழ்வு பற்றி முஹம்மது யாசின் கருத்து தெரிவிக்கும் போது, 

“அந்த மனிதன் எங்கிருந்து வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மெக்டொனால்டுடமிருந்து ஒரு ஆர்டரை வழங்கிக் கொண்டிருந்தேன். நிறைய ஆபத்து மற்றும் வேகமாக நகரும் போக்குவரத்து நேரமாக இருந்தது. அவர்கள் பாதையை கடக்க தடுமாறிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட நான் உடனே எனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, அவர் எங்கு செல்ல விரும்புகிறார் என்று கேட்டேன். அவர் சாலையின் முடிவை நோக்கி சுட்டிக்காட்டினார், நான் அவருக்கு சாலையை கடக்க உதவினேன். அந்த மனிதர், எனக்கு நன்றி தெரிவித்தார், ”என்றார்.

அவர் இவ்வாறு உதவி செய்வதை அந்தப் பாதை வழியாக பயணித்த ஒருவர் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாக பரவியது. இதன் பின்னர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கத்தார் உள்துறை அமைச்சகத்திடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக யாசின் தெரிவித்துள்ளார். மேலும், “நான் செய்ததற்கு அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்தனர். பரிசாக, அவர்கள் எனக்கு ஹெல்மெட், ஜாக்கெட் மற்றும் காலணிகளைக் கொடுத்தார்கள்.

அத்துடன் அவரது நிறுவனமான தலபாத் (Talabat) சவாரி ஏஜென்டாக இருந்த யாசினை ஒரு சவாரி கேப்டனாக (Rider Captain) பதவி உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments

note