ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் திட்டமான "பயனுள்ள பிரஜை மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்" : காரைதீவில், பிரதேச செயலாளர் ஆரம்பித்து வைத்தார்.
நூருல் ஹுதா உமர்
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் சுவிட்சத்தின் நோக்கில் முக்கிய கருவாக அமைந்துள்ள "பயனுள்ள பிரஜை மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்" எனும் எண்ணக்கருவை கொண்டு 20 லட்சம் வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்காக தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காரைதீவு - 08ம் பிரிவு கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எம்.எம்.அச்சு முஹம்மட், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
No comments