கொரோனாவின் தீவிரம்; யாழ் யுவதிக்கு தாலி கட்டிய டென்மார்க் மாப்பிள்ளை! நடந்தது என்ன?🤔
MADURAN KULI MEDIA
31/10/2020
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகிதை சேர்ந்த யுவதிக்கும், டென்மார்க்கிலுள்ள புலம்பெயர் தமிழ் இளைஞருக்கும் நேற்றயதினம் சூம் செயலியில் திருமணம் இடம்பெற்றுள்ள ஆச்சர்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி சூம் தொழில்நுட்பத்தில் யுவதிக்கு, டென்மார்க் மாப்பிள்ளை தாலி கட்டினார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
டென்மார்க்கில் வதியும் ஊரெழுவை சேர்ந்த இளைருக்கும் உரும்பிராயை சேர்ந்த யுவதியொருவருக்கும் இந்த வருட ஆரம்பத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டது.
எனினும், கொரோனா லொக்டவுண் காரணமாக மணமகன் இலங்கைக்கு வருவதில் சிரமமிருந்தது. அத்துடன் கொரோனா முடிவற்று நீண்டு வரும் நிலையில், பல மாதங்களாக திருமணம் தள்ளிப் போய்கொண்டிருந்தது.
எனினும் வருட இறுதியில் இலங்கை நிலவரம் சுமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாகி மீண்டும் நிலைமை மோசமாகியுள்ளது.
இதனையடுத்து யுவதியின் சாதகப்படி இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்ய வேண்டுமென யுவதியின் பெற்றோர் அழுங்குப்பிடி பிடித்ததையடுத்து, சூம் தொழில்நுட்பத்தில் தற்போது தாலி கட்டிக் கொள்வதென, தீர்மானிக்கப்பட்டு, இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments