ஏ.எச்.எம்.ரியாஸ் மூலம் இன்று இன மத பேதமின்றி வேளைவாய்ப்பு நியமன பத்திரம் வழங்கி வைப்பு.
MADURAN KULI MEDIA
25/10/2020
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேச மற்றும் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், கல்பிட்டி முந்தல் அபிவிருத்திக் குழு உப தலைவரும், புத்தளம் மாவட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இனைப்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸிற்கு வழங்கப்பட்ட 100 வெற்றிடங்களுக்கான முதற்கட்ட வேளைவாய்ப்பு வழங்கும் நிகழ்வு இன்று (25) சுமார் 11 பேருக்கான வேளை வாய்ப்பு நியமன பத்திரம் அவரது இல்லத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது ஜன பெரமுன கட்சியின் யாழ்,கிளிநொச்சி மாவட்ட இடம்பெயர் புத்தளம் மக்களுக்கான அமைப்பாளர் முயீன் மற்றும் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரிஸ்வி, பொதுஜன பெரமுன கட்சியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் ஆகியோரோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments