மதுரங்குளி மீடியாவின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி
மாணவர்களின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக கை கோர்க்கும் ஆசிரியர் பணி என்பது கல்வியோடு முற்று பெறாது ஒழுக்க விழுமியங்கள்,சமூக பண்பாட்டு விழுமியங்கள், தன்னம்பிக்கை, ஊக்கம், பொது அறிவு, விடா முயற்சி என மாணவர்களுக்கு தன் தியாகத்தின் மூலம் போதித்து சமூகத்திற்கு மத்தியில் தன்னை விட சிறந்த முறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என எதிர்பார்து பயணிக்கும் உன்னத ஆசிரியர் தினம் தான் இன்று என்பதை நாம் யாவரும் அறிவோம்.
என்றாலும் இன்றைய தினத்தை மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியர் தின விழாவை மிக விமர்சையாக கொண்டாட எதிர்பார்த்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தாக்கத்தினால் மாணவர்களின் எதிர் பார்ப்பு நிலைகுலைந்தமையை நாம் நினைவு கூறுகிறோம்.
இத்தினம் என்பது ஆசிரியர்களை கௌரவவிப்பதற்காக உலகில் பொன் எழுத்துக்களால் பதியப்பட்ட நாள் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்களின் வழிகாட்டல் கனிசமான பங்கை வகிக்கின்றது என்றால் ஆசிரியர்கள் என்றும் பாராட்டத்தக்கவர்கள் அல்லவா!
அவர்களோடு நாம் என்றும் நன்றி உணர்வோடு பயணிப்போம் என்றால் அவர்களின் பிரார்த்தனை மூலம் எமது வாழ்க்கை வளமிக்கதாய் மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதை புரிந்து செயல்படுவோம்.
சுய நலமின்றி மாணவர்களின் கனவுளை தன் தியாகத்தின் சுவடுகளாய் தடம் பதித்து மாணவர்களின் வாழ்கையில் ஒளி விளக்காய் ஒளி வீசும் அற்புத ஆசான்களுக்கு இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
நிர்வாகம்
மதுரங்குளி மீடியா
No comments