ஜனாதிபதியிடம் இருந்து மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
15/10/2020
விவசாயிகளுக்கு அதிக விலையும், நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் வகையிலான சந்தையை உருவாக்கவேண்டியதன் அவசியம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பிரதேசங்களினதும் அறுவடைகளை இடைத்தரகர்களின் தொடர்பின்றி விற்பனை செய்யும் வசதி,
விவசாயிகளுக்கே நேரடியாக கிடைக்கும் சூழலை ஏற்படுத்தி அதனை ஆரம்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடின்றி அனைத்து பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை முறைப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி மற்றும்;
பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வயல் நிலங்களில் தென்னையை உடனடியாக பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.l
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஐவாதி)
No comments