வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்
வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண பிரதம செயலாளர் பி.பீ.எம். சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தல் - வடமேல் மாகாணம்
covid-19 காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த காலப்பகுதிக்குள் காலாவதியான வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதிதாக வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் போது தண்டப்பணத்தை அறவிடாது இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயவுடன் அறியத் தருகிறோம்.
(Adadireana)
No comments