முகக்கவசம் அணியாத 39 பேர் கைது நீடிக்குமா பிரச்சினை!
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 221 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 40 வாகனங்கள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் வழங்கப்பட்டிருந்த சில சலுகைகள் நேற்றிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும், அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக் கவசத்தை அணியாது. சமூக இடைவெளியை பேணாத 39 பேர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் நாட்களில் இது தொடருமெனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு, பாணந்துறைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments