Breaking News

அபாயாவுடன் முஸ்லிம் பெண்கள் பணிக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது - சட்டத்தில் இடமில்லை - நீதி அமைச்சர் அலி சப்ரி

அபாயா ஆடை அணிந்து வேலைக்கு செல்வதை எவறும் தடுக்க முடியாது. தடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. முகத்தை மூடுவதை தடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் அதற்கு காரணங்கள் இருக்கிறது. ஆனால் அபாயா அணிவதை எவறும் தடுக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்த முஸ்லிம்  பெண்ணொருவர் சாரி அணிந்து வரவேண்டும் என்ற பணிக்கப்பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



No comments

note