Breaking News

இந்தியா வசமுள்ள எண்ணெய் கிணறுகளை மீளப்பெற முடிவு.

MADURAN KULI MEDIA 
30/09/2020

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறியுள்ளார்.

“திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதரகமும் எம்முடன் ஒத்துழைக்கின்றனர். இந்த எண்ணெய்க் குதங்கள் லங்கா IOC நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன. எனினும், இது இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும். அத்துடன், அரசியல் ரீதியான முக்கியத்துவம் இதில் காணப்படுகிறது. ஆகவே, நாம் முதலில் இந்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும். பின்னர் குறித்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எம்மால் முடியும்” என்றார்.

செய்தி வழங்குனர் 
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note