"ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ்" மாணவர்களினால் மதுரங்குளி கிராமிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சிரமதானமும், மரநடுகையும்
"ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ்" மாணவர்களினால் மதுரங்குளி கிராமிய வைத்தியசாலையில் முழுமையான சிரமதானமும், மரநடுகையும் கடந்த 09/09/2020 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
சர்வதேச தொண்டு தினத்தை (International Charity Day) முன்னிட்டு ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் மாணவர்களால் நாளாந்தம், உண்டியல் மூலம் சேர்க்கப்பட்ட நிதியூடாக வைத்தியசாலைக்கு அத்தியவசிய தேவைப்பாடாக இருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எச். அஜ்மல் மற்றும் வைத்திய அதிகாரி கலாம் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
எம்.எச்.எம்.ஹாரிஸ் - மதுரங்குளி
No comments