Breaking News

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண்பரிசோதனையே மேற்கொள்ளப்படும்.

சகலருக்கும் எக்ஸ் ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குறுதி அழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது நபரொருவர் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதில் எந்த தாக்கமும் செலுத்தாது.

அவர்களுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.



No comments

note