கல்பிட்டி அம்மாதோட்டம் ஜும்மா பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேசை வழங்கி வைப்பு.
நீண்ட கால தேவையாக காணப்பட்ட பள்ளிவாசல்துறை, அம்மாதோட்டம் பள்ளிவாசலுக்கான ஜனாசா குளிப்பாட்டும் மேசை புத்தளம் வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிஸாரின் முயற்சினால் இன்று ( 2020-09-20) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ பிரதிநிதிகளான உதவி அதிபர் முஹ்சி, சியாத், இர்பான் ரிஸ்வான் மற்றும் பள்ளி பரிபாலன சபைத்தலைவர் யாசிர், ரியாஸ் சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் ஊர்வாசிகள் கலந்து கொண்டனர். மேற்படி திட்டம் அகில இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் (YWMA - Sri Lanka) மூலம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இர்பான் றிஸ்வான்
No comments