மதுரங்குளி மீடியாவின் செய்தியாளராகவும், விளம்பர அறிவிப்பாளராகவும் எஸ்.எம்.எம். ஸபாக் (ஜவாதி) நியமனம்.
புத்தளம், மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த சனூன் மரைக்கார் முகம்மது ஸபாக் (ஜவாதி) என்பவர் தனது ஆரம்பக் கல்வியை பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தொடர்ந்த அவர் பின்னர் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற நிலையில், அவரின் சிறு பருவத்தில் உதித்த இலட்சியம் தான் ஒரு ஆலிமாக ஆக வேண்டும் என்ற அந்த கனவை நிறைவேற்ற பாடசாலை கல்விக்கும், மார்க்க கல்விக்கும் சமநிலை முன்னுரிமை வழங்கும் அல் ஜவாதியா அரபுக் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்து மார்க்க கல்வியை மற்றுமன்றி கணினி அறிவையும் கற்று NIT சான்றிதழ்களோடு ஆலிமாக 2020/01/19 ஆம் திகதி அக்கலாபீடத்திலிருந்து விடை பெற்றார்.
பின்னர் தனது தொழிலோடு சேர்த்து ஊடகத்துறையிலும் தடம் பதிக்க வேண்டும் என்ற இலச்சியத்தோடு ஊடக அமர்வுகளில் கலந்து கொண்டு தனது திறமையை விளம்பரம் எழுதல், குரல் பதிவின் மூலம் விளம்பரம் செய்தல், செய்தி தொகுத்தல், செய்தி வாசித்தல் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
பின்னர் ஊடகத்துறையில் டிப்லோமா கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் இணைய ஊடக மூலம் தனது திறமைகளை வெளிகாட்டி வருகிறார்.
இவர் தற்பொழுது மதுரங்குளி மீடியாவில் செய்தியாளராகவும், விளம்பர அறிவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments