மதுரங்குளி மீடியாவின் கல்பிட்டி பிராந்திய செய்தியாளராக இர்பான் ரிஸ்வான் நியமனம்.
கல்பிட்டி நகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளம் சமூக சேவையாளரும் இணையத்தள ஊடகவியலாளருமான M.R.M. இர்பான் அவர்கள் எமது மதுரங்குளி மீடியாவின் கல்பிட்டி பிராந்திய செய்தியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஊர் Tvயின் பிரதானியும் அறிவிப்பாளராகவும் செயற்பட்டு வருவதுடன், கல்பிட்டியின் குரல் ஊடகத்தின் உறுப்பினரும், செய்தியாளருமாவார்.
இளைஞர் சம்மேளனத்தின் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் ஊடக செயலாளராகவும், செடோ அமைப்பின் ஊடகத்திற்கு பொறுப்பாளராகவும், அதே அமைப்பின் கல்பிட்டி மண்டலகுடா கிராம சேவகர் பிரிவுக்காக இளைஞர் வலையமைப்பின் தலைவராகவும், வை.எம்.எம்.ஏ நிறுவனத்தின் உறுப்பினராகவும், கல்பிட்டி யூத் கொம்மியூனிடி அமைப்பின் ஸ்தாபக தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments