எதிர்க் கட்சித் தலைவரானார் சஜித் பிரேமதாச
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.
No comments