Breaking News

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்க்ஷ  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.08.2020) காலை 
களனி ரஜமஹா விஹாரை வளாகத்தில் நடைபெற்றது

இலங்கை பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் இம்முறை நடைபெற்ற 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்ற விருப்பு வாக்கு வரலாற்றில் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




No comments