முகப்பூச்சு கிறீம் விற்பனை தொடர்பில் சுற்றி வளைப்பு
முகப்பூச்சு கிறீம் விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்பொன்று சிலாபம் நகரில் இடம் பெற்றது.
ஒன்லைன் வியாபார முறை மூலம் இலங்கையில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட இறக்குமதி ,விற்பனை விநியோகஸ்தர் விபரங்கலற்ற முகப்பூச்சு கிறீம்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் புத்தளம் பாவனையாளர் அலுவல்கள் அதிகரசபையின் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டன .
முகப் புத்தகத்தின் மூலமாக விளம்பரங்களை மேற் கொள்ளும் குறிப்பிட்ட குழுவினர் குறைந்த விலையில்,, விற்பனைக்கு தடை செய்யப்பட்ட முகப்பூச்சு கிறீம் வகைககளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறிப்பிட்ட சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டது. இதற்காக சிலாபம் பொலிஸாரும் தமது பங்களிப்பையும்,ஒத்துழைப்பினையும் வழங்கி இருந்தனர்.
இந்த சுற்றி வளைப்பின் போது சிலாபம் பகுதியில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட முகப்பூச்சி கிறீம்களை விற்பனை செய்யும் பல வியாபார நிலையங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
வியாபாரிகளிடமிருந்தும்,தடை செய்யப்பட்ட விற்பனை பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்தும் பாவனையாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுதல் வேண்டும். அவ்வாறான வியாபாரிகளை வியாபார நிலையங்களை அறிந்தால் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் துரித 1977 இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு முரைப்பாடுகளை மேற் கொள்ள முடியுமென்று புத்தளம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரி ரிஸ்வி தெளபீக் தெரிவித்தார்.
- புத்தளம் நிருபர் -
No comments