வைத்தியசாலையில் தங்க ஆபணரங்கள் அபகரிப்பு
புத்தளம் தள வைத்தியசாலை க்ளினிக்கிற்கு வருகை தந்திருந்த இரு நோயாளிகளின் சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருடரை புத்தளம் பொலிஸார் தேடி வருகின்றனர்.
வைத்தியசாலை சேவையாளர் போன்று செயற்பட்டு 64 மற்றும் 84 வயதுகளுடைய இரண்டு பெண்களை ECGக்கு பொறுப்பானவர் வருகை தந்துள்ளார் என்று கூறி வெளி நோயாளர் பிரிவில் அமைந்துள்ள அறையொன்றிற்குள் இந்த ஏமாற்றுப் பேர்வழி அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனைக்காக தங்க ஆபரணங்களை கழற்ற வேண்டும் என்று கூறி அவர்கள் அணிந்திருந்த ஒரு மாலை மற்றும் மூன்று மோதிரங்களை களற்றச் செய்துள்ளார்.கழற்றிய தங்க நகைகளை குறித்த நபர் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக இரு பெண்களும் வைத்தியசாலை பொலிஸாரிடமும் வைத்தியாசாலை அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
மதுரங்குளி தொடுவாவைச் சேர்ந்த 84 வயதுடைய லூசி எக்னஸ் என்பவரின் ஒரு மாலையும் மோதிரமொன்றும் கல்பிட்டி பாலகுடாவைச் சேர்ந்த 64 வயதுடைய எக்நஸ் பெர்ணாந்து என்பவரின் இரண்டு மோதிரங்களுமே இவ்வாறு பறித்து செல்லப்பட்டுள்ளது.
- புத்தளம் நிருபர் -
No comments