Breaking News

08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 352 பேர் போட்டி

இன்று  நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்திலிருந்து 08 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர். இதற்காக 352 பேர் தேர்தலில் போட்டியிடுகினறனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 13வும் , சுயேட்சை குழு 19வும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

புத்தளம் மாவட்டத்தில் 614,370 பேர்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  புத்தளம் தேர்தல் தொகுதியில் 151,963 பேறும் ஆனமடு தேர்தல் தொகுதியில் 124,371 பேறும் சிலாபம் தேர்தல் தொகுதியில் 127,531 பேறும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் 97,791 பேறும்  வென்னப்புவ தேர்தல் தொகுதியில் 112,714 பேறும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தபால் மூலம்   வாக்களிக்க 14,267 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

 புத்தளம் மாவட்டத்தில் 421 வாக்களிப்பு  நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்ட வாக்குகளை எண்ணுவதற்காக 99 வாக்கு எண்ணும் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. . இவற்றில் 88 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 10 வாக்களிப்பு நிலையங்களும் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குகளை  எண்ணுவதற்காக ஒரு வாக்களிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.

- புத்தளம் நிருபர் -



No comments