சம்பிக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சட்டமா அதிபர் திணைக்களம்
MADURAN KULI MEDIA
12 07 2020
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கவனயீனமாக முறையில் வாகனத்தை செலுத்தி நபர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்தி வழங்குனர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments