கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் மர்ஹும் ஆர்.ஜலீஸ் ஆசிரியர்
ஏ.எச். பெளசுல் ஆசிரியர்.
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் மர்ஹும் ஆர்.ஜலீஸ் ஆசிரியர் ஆவார்.
1990 ஆம் ஆண்டு கடையாமோட்டை பாடசாலைக்கு மர்ஹும் ஆர்.ஜலீஸ் ஆசிரியர் வருகை தரும் போது இப்பாடசாலை க.பொ.த (சா/த) வரை மட்டுமே கற்பித்தல் நடைபெற்றது.
குறிப்பாக இந்த ஆசிரியரின் காலத்தில் க.பொ.த. (சா/த) தரத்தில் இடம்பெயர்ந்து வந்த மாணவர்களுடன் உள்ளூர் மாணவர்களையும் ஒன்றாக இனைத்து பாடங்கள் நடாத்தியதோடு, கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறி அன்றைய காலகட்டத்தில் 44 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றி சுமார் 40 மாணவர்கள் சித்தியடைந்தனர். இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும்.
அதேபோன்று அவருடைய காலகட்டத்தில் க.பொ.த. உயர் தரம் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டு நூறு வீதமான மாணவர்கள் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் அதில் மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகினர்.
நான் உட்பட தற்போது கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரின் அதிபர் எம்.எச். தௌபீக், ஆசிரியர்களான ஏ.ஏ. அஷ்ரப், எஸ்.எச்.எம். சாலிஹீன், ஏ.எம். அனஸ், ஏ.எஸ், அஸ்ஹர், சுஹைப்கான் மற்றும் எம்.ஐ. றிஸ்வானா ஆசிரியை ஆகியோர்களாவர்.
அதேநேரம் பலர் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் முதலாவது சாதனை படைத்தனர்.
இவற்றுக்கெல்லாம் எம்மை விட்டு பிரிந்த மர்ஹும் ஆர். ஜலீஸ் ஆசிரியருடன் இனைந்து மௌலவி எம்.எச்.ஹனஸ் மொஹிதீன் (நளீமி) ஆசிரியர் மற்றும் இஸ்மாயில் ஆசிரியர் ஆகியோர்களின் பங்களிப்பு பிரதானமானது.
அதேபோன்று இவர்களுடன் இனைந்து அக்கால கட்டத்தில் அதிபராக கடமை புரிந்த தல்ஹா அதிபரையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தற்போது கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பெரும் விருட்சமாக வளரக் காரணம் அன்று அந்த விதையை நாட்டியவர் மர்ஹும் ஆர்.ஜலீஸ் ஆசிரியர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அன்னார் மறைந்து இன்று 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அவருடைய மாணவன் என்ற வகையில் இதனை நினைவுபடுத்துவதோடு அன்னாருக்கு அல்லாஹ்தஆலா அவருடைய சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்கி அருள் புரிவானாக ஆமீன்.
No comments