Breaking News

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை – இராணுவ தளபதி

MADURAN KULI MEDIA 
09 07 2020
    

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை  என்பது உறுதி செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கைகள் இன்று (09) கிடைக்கும் எனவும் இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது கூறியுள்ளார்.

செய்தி ஆசிரியர் 
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments