Breaking News

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசசப்பிரியவின் அதிரடி நடவடிக்கை

MADURAN KULI MEDIA 
10  07 2020

தேர்தல் ஆணைக்குழுவினால் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு
தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல் சட்டத்தின் படி அவை குற்றச் செயல்கள் என்பதால் உடனடியாக அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் தனியார் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் குறித்தவொரு வேட்பாளரை அல்லது கட்சியை ஊக்கப்படுத்தும் விதத்திலான வாசகங்கள், அடையாளங்கள், புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வேட்பாளர் பயணம் செய்யும் பிரத்தியேக வாகனம் தவிர்ந்த வேறு வாகனங்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறான ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகளை காட்சிப்படுத்தலானது 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 74 ஆம் பிரிவின் கீழ் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தனியார் பேரூந்துகளிலும் முச்சக்கர வண்டிகளிலும் ஏனைய தனியார் வாகனங்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பின் உடனடியாக அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தனியார் பேரூந்து, முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட வகையிலான ஸ்டிக்கர்களை நீக்குவதற்கு ஒவ்வொரு பொலிஸ் அதிகாரப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் விதத்தில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் பிரிவுகளுப் பொறுத்தமான பொலிஸ் அதிகாரிகளுக்கும் அதன் மூலம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தி ஆசிரியர் 
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments