Breaking News

புகையிரத கடவையில் இடம் பெறும் விபத்துக்கள்

மழை காலம்  மற்றும் சாதாரண நாட்களில் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி புகையிரத கடவைக்கு அருகில்  மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் துவிச்சக்கர  ஓட்டுநர்கள் பெறும் ஆபத்தினை எதிர்கொண்டு வருகின்றனர் .


தண்டவாளங்கள்  சீராக இல்லாததன் காரணமாக தினம் தோறும்  ஏராளமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் பிரதான வீதியில் சறுக்கி விழுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக குறித்த புகையிரத கடவைக்கு   அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பலர் சறுக்கி விழுந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பிரதான வீதியில் அமைந்துள்ள தண்டவாளம் பிரதான வீதியை  விட சற்று உயரமாக இருப்பதால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிளின் சக்கரங்கள் அந்த தண்டவாளத்தில் மோதுண்டு சறுக்கி விழும் நிலை காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உரியவர்கள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

- புத்தளம் நிருபர் -







No comments