Breaking News

ஃப்ரீ ஃபயர்' எனும் ஆன்லைன் விளையாட்டினால் அதிர்ச்சி தகவல்

14 07 2020

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அமலாபுரத்தில்9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்ஒருவர் கடந்த 20 நாட்களாக 'ஃப்ரீ ஃபயர்' எனும் ஆன்லைன் விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.

இந்த மாணவனின் தந்தை குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம்பணம் அனுப்பி வைக்கிறார். இந்நிலையில், அந்த மாணவர் செல்போனில் மும்முரமாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டை விளையாடி வந்தநிலையில், இதில், கூடுதலாக ஆயுதம் வாங்க ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும் என்றும், இதற்கு வங்கிக் கணக்கின் விவரங்களை அப்லோட் செய்யுங்கள் எனவும் குறுந்தகவல் வந்துள்ளது. இதன்படி, தனது தாயின் வங்கிக் கணக்கின் விவரங்களையும், ஏடிஎம் கார்டு விவரங்களையும் அளித்துள்ளார்.

செய்தி வழங்குனர் 
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஐவாதி)



No comments

note